தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த பொதுச்சபை கூட்டமும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும்

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இறுக்கமான உறவினைப் பேணுவதோடு, தமிழ் மக்களினதும், தமிழ் கட்சிகளினதும் ஒற்றுமைக்காக உழைப்பதற்காக உறுதிகொள்வதென்ற தீர்மானத்தினை எடுத்துக் கொள்ளவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி உறுதியளித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு யாழ். நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்ற இப்பொதுச்சபை கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் 15 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அத்தீர்மானங்களாவன:

கட்சி வலுவடைய வேண்டுமாயிருந்தால் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தாம் எடுக்கும் முடிவுகள் தங்கள் கட்சியை சார்ந்ததா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினை சார்ந்தா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அங்கத்தவர்கள் தான்தோன்றித்தனமாக எடுக்கும் முடிவுகளை தவிர்;த்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.

சிறுபான்மை இனத்தவர்கள் எதிர்நோக்கும் எத்தகைய பிரச்சினையாயினும், வன்முறையின்றி பேச்சுவார்த்தை மூலமும், இணக்கப்பாட்டுடனும், சமாதானமாகவும் தீர்த்துக் கொள்ளுமாறும் தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணி ஏனைய இன மக்களுடனும், பல்வேறு இன, மத குழுக்களுடனும் நல்லுறவைப் பேணுவதுடன், இலங்கை வாழ் அனைத்து மக்களையும் சமாதானத்துடனும், ஜனநாயக மனிதாபிமான அடிப்படையில் உரிமைகளை அநுபவிக்க உத்தரவாதமளிக்க வேண்டுமென்றும் அரசை வலியுறுத்துகின்றது.

விடுதலைப் புலிகள் தலைதூக்குகிறார்கள் என்ற அரசின் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லையென்றும், அவ்வாறு தொந்தரவு செய்து தலைமறைவாவதற்குரிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டாமென்றும் அரசை தமிழர் விடுதலை கூட்டணி கேட்டுக்கொள்கின்றது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய அவசியமில்லை. மாணவர்கள் தம்மைத் தாமே கவனித்துக் கொள்ளக்கூடிய தகுதியுடையவர்கள். மாணவர்களுடன் சம்பந்தப்பட்ட எவரும் அரசு இராணுவத்தை தொடர்ந்து வைத்திருக்கவும், நியாயப்படுத்தவும், வாய்ப்பளிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்டவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக் கொள்கின்றது.

ஒற்றையாட்சியின் கீழ் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதில் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுதியாக உள்ளது என்றும் மேற்படி தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின் போது 2013ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவும் இதன்போது இடம்பெற்றதுடன் இக்கூட்டத்தில், கட்சியின் உறுப்பினர்கள் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply