பல்கலைக்கழகத்தில் புலிகளுக்கு எதற்காக அஞ்சலி ?

தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஏன் அஞ்சலி செய்ய வேண்டும். அதற்காக ஏன் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று யாழ். மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் சுபியான் கேள்வி யெழுப்பியுள்ளார். இதற்கு சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான விந்தன் கனகரத்தினம் இவ்வாறு கூறுவீர்களானால் நீங்கள் இந்த மண்ணிலேயே இருக்க தகுதி இல்லாதவர்கள் என ஆவேசமாக பதிலளித்தார்.

யாழ். மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற யாழ். மாநகரசபையின் 2012ஆம் ஆண்டுக்காக மாதாந்த இறுதிக் கூட்டநிறைவில் எதிர்க்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தனது கருத்தினை முன்வைக்கும் போதே பதிலுக்கு விவா தித்த சுபியான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதனை ஒருபோதும் யாராலும் தடுக்க முடியாது. இறந்தவர்களை மக்கள் தமது வீடுகளில் நினைவுகூரலாம் என்றும் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ் வரி கூறிய கருத்தையும் யாழ். மாநகரசபை ஆளும் கட்சி உறுப்பினர் சுபியான் சபை யில் கூறி முதல்வருக்குத் தனது நன்றியும் தெரிவித்தார்.

ஆத்ம சாந்திக்காக அனுஷ்டிக் கப்படும் அஞ்சலிகள் வீடுகள், பாடசாலைகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என எங்கும் அனுஷ்டிக்க முடியும். அது எமது உறவுகளுக்கு நாம் செய்யும் நன் றிக்கடனாக அமைகின்றது என விந்தன் கனகரத்தினம் தெரிவிக்கும் வேளையில் குறுக்கிட்ட உறுப்பினர் சுபியான், நாட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் புலிகள்.

அவர்களுக்கு எவ்வாறு பகிரங்கமாக அஞ்சலி செலுத்த முடியும் அவ்வாறு செலுத்தினாலும் ஏன் கல்விக்கூடங்களைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் அர சியலுக்காக ஏன் பல்கலை. மாணவர்களைத் தூண்டி விடுகின்யர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

அவரின் கருத்தினை மறுதலித்த விந்தன் கனகரத்தினம் இவ்வாறு கூறுவீர்களானால் நீங்கள் இந்த மண்ணிலேயே இருக்க தகுதி இல்லாதவர் என ஆவேசமாகப் பதிலளித்தார்.

இதனையடுத்து பதிலளித்த மாநகர சபை முதல்வர் இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவது எமது ஒவ்வொருவரது கடமை, ஆனாலும் அஞ்சலி செலுத்து வதற்கான இடத்தினை தெரிவு செய்து செலுத்த வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply