இலங்கையில் 22 வீதமான குழந்தைகள் நிறைகுறைவானவர்கள்: உலக வங்கி தெரிவித்துள்ளது

இலங்கையிலுள்ள ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளில் 22 வீதமானவர்கள் நிறைகுறைவானவர்கள் என உலக வங்கி தெரிவித்துள்ளது.  மிலேனியம் இலக்குகளுக்கு அமைய இலங்கையிலுள்ள சிறுவர்களின் போசாக்குமட்டம் அதிகரிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்திருக்கும் உலக வங்கி, இலங்கையில் ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளில் 18 வீதமான குழந்தைகள் மிகக் குள்ளமாக இருப்பதாகவும், 15 வீதமான குழந்தைகள் மிகவும் மெலிந்து காணப்படுவதாகவும் கூறியுள்ளது.

எனினும், கடந்த இரண்டு தசாப்தங்களாக சிறுவர்களின் போசாக்கில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் ஏற்பட்டதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கையைத் தளமாகக் கொண்டிருக்கும் அமைப்புக்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், பொதுமக்கள் சுகாதார சேவையின் ஊடாக முன்னெடுக்கப்படும் பேசாக்கு வழங்கும் திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்” என உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் நாகோ இஷி தெரிவித்தார்.

இலங்கையில் காணப்படும் போசாக்கின்மையை நீக்குவதற்கு இந்த நடவடிக்கைகள் வெற்றியளிக்குமாயின் மிலேனியம் இலக்குகளை இலங்கை வென்றுவிடும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply