இன்று முதல் முல்லைத்தீவில் மேலும் ஒரு பாதுகாப்பு வலயம் : இராணுவத் தலைமையகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள பாதுகாப்பு வலயப் பிரதேசத்தின் எல்லை மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.இதன்படி மேலும் 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தப் பாதுகாப்பு வலயம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பாதுகப்பு பிரதேச எல்லை விஸ்தரிப்புத் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply