தாய்நாட்டை பேரழிவுக்குள்ளாக்கும் நீர்மூழ்கிகளை உருவாக்கும் தலைமுறை மீண்டும் உருவாக இடமளிக்க முடியாது:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
பயங்கரவாதமற்ற நாடொன்றுக்கு நாம் வழி சமைத்துள்ளோம் தாய் நாட்டைப் பேரழிவுக்குள்ளாக்க நீர்முழ்கிக் கப்பல்களை உருவாக்கும் இளைய தலைமுறையொன்று மீண்டும் உருவாக இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டை சீரழிந்து மனிதப் படுகொலைகளில் ஈடுபடுத்தப்படவென வடக்கு, கிழக்கு இளைஞர்கள் கரும்புலி படைகளுக்குச் சேர்க்கப்படுகின்ற நிலை மாற்றம் பெற வேண்டும். அத்தகைய இளைஞர்கள் நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்வதற்கான பொறுப்புடையவர்களாக உருவாக்கப்பட வேண்டுமென்பதே தமது நோக்கமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாதமற்ற இலங்கையை உருவாக்குதவற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நம்மிடமிருந்து கை நழுவிய நாட்டின் மூன்று மடங்கு கடற்பிரதேசத்தை மீண்டும் நாம் பெற முடிந்தமை பெருவெற்றியாகுமெனவும் அவர் தெரிவித்தார்.
சமுத்திரவியல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் உரை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
சமுத்திரவியல் பல்கலைக்கழகம் பாரியதொரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதொன்று. இதனை ஆரம்பித்ததில் எந்தவித குறுகிய நோக்கமும் இருந்ததில்லை. எமது புதிய பரம்பரை கடல்வளங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அதற்கான காலம் தற்போது உருவாகியுள்ளன.
வெறுமனே மீன் பிடிக்கும் தொழில் மட்டும் கடலின் பயனல்ல. அதில் பல்வேறு வளங்கள் உள்ளன. அதேவேளை கடல் பிரதேசம் சம்பந்தமாக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு பெறும் வகையில் சர்வதேசசத்துடன் இணைந்ததான செயற்றிட்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டிய காலம் எழுந்துள்ளது.
வடக்கு, கிழக்கு முழுவதிலுமுள்ள கடற் பிரதேசத்தின் உரிமைகள் நம்கையை விட்டு நழுவிப் போயிருந்தன. திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கூட நாம் சுதத்திரமாக போய்வரக்கூடிய சூழ்நிலை அற்றுப் போயிருந்தது. இன்று அந்நிலை மாற்றப்பட்டு சகல கடற்பிராந்தியமும் எமது உரிமை சொத்தாகியுள்ளன.
கடல்பற்றிய அறிவில் நாம் சர்வதேச சமுத்திரவியல் பல்கலைக்கழகங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. கடந்த காலங்களில் எம்மால் முடியாமற் போனதை சர்வதேச அறிவுடன் மீளப் பெற்றுக் கொள்வது அவசியமாகிறது.
சமுத்திரவியல் பல்கலைக்கழகம் சகல இன,மத பிரதேசத்தினருக்கும் உரித்துடையது. வடக்கு, கிழக்கு இளைஞர்களுக்கும் சமுத்திரவியல் சம்பந்தமான கல்வியை வழங்கும் பொறுப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது.
இந்நாட்டில் சகல இன மத மக்களும் நாற்திசையிலுமிருந்து சரிசமனாக கற்கக்கூடியதான உரிமையை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். வடக்கு, கிழக்கு இளைஞர்களும் இங்கு பட்டதாரிகளாக உருவாக வேண்டும் அவர்களும் தாய்நாட்டுக்குச் சேவை செய்யும் நிலை வரவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நான் கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தேன். இன்று இப்பல்கலைக்கழக பட்டதாரிகளுக்குப் பட்டமளிக்கும் பாக்கியத்தை பெற்றதில் மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply