பிரபாகரன் இன்னமும் வன்னியில்: பாதுகாப்பு அமைச்சு
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இன்னமும் வன்னியில் பொதுமக்களுடன் பொதுமக்களாவே இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் கைதுசெய்யப்பட்ட இரண்டு கரும்புலிகளிடம் மேற்கொண்ட விசாரணையிலிருந்தே இந்த விபரம் தெரியவந்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபாகரனும் அவருடைய மகன் சார்ள்ஸ் அன்டனியும் வன்னியிலிருந்து இராணுவத்தினரின் தாக்குதல்களை முறியடிக்கும் திட்டங்களை வகுத்துவருவதாக கைதுசெய்யப்பட்டவர்கள் சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்குக் கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 28ஆம் திகதி இந்த இரண்டு கரும்புலிகளும் இராணுவத்தின் 57வது படைப்பிரிவிடம் சரணடைந்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply