நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது

வடமேல், மத்திய மாகாண சபைகளு க்காக நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது.இரு மாகாணங்களிலும் வெளியான முடிவுகளின்படி ஐந்து மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

இரண்டு தேர்தல் தொகுதிகளைத் தவிர ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் முன் னணி வெற்றியீட்டியுள்ளது. கடந்த கால ங்களில் ஐ. தே. க வெற்றிபெற்று வந்த தொகுதிகள் பலவற்றில் ஐ. ம. சு முன் னணி கூடுதல் வாக்குகளைப் பெற்று ள்ளது.

கண்டி, நுவரெலியா – மஸ் கெலியா தொகுதிகளில் மாத்திரம் சிறு தொகை வாக்கு வித்தியாசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியுள்ளது. ஏனைய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 75% வாக்குகள் கிடைத்துள்ளன.

அதே நேரம் ஐ. தே. க.வுக்கு 32% வாக்குகளே கிடைத்துள்ளன. முன்பு ஐ. தே. க வெற்றியீட்டி வந்த மலையகத் தேர்தல் தொகுதிகளிலும் ஐ. ம. சு. முன்னணிக்கும் கூடுதல் வாக்குகள் அளித்துள்ளன. இரு மாகாணங்களினதும் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டதற்கமைய 37 தொகுதிகளில் முன்னணி வெற்றியீட்டியுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடியொன்றின் வாக்குப் பதிவு ரத்துச் செய்யப்பட்டதால் வடமேல் மாகாண சபைக்கான தேர்தல் முடிவை வெளியிடுவதை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்தியுள்ளார்.

எனினும், வடமேல் மாகாணத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றியீட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ தேர்தல் தொகுதியில் ஐ. ம. சு. முன்னணி 39,999 வாக்குகளைப் பெற்றுள்ள அதேநேரம், ஐ. தே. க. வுக்கு 9,236 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில் முன்னணிக்கு 79.12% வாக்குகள் கிடைத்துள்ள வேளையில் 24% வாக்குகளை மாத்திரமே ஐ. தே. க. பெற்றுள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பில் கூடுதலாக முன்னணிக்கே கிடைத்துள்ளது. 21810 வாக்குகளை முன்னணி பெற்றுள்ள நிலையில், 4748 வாக்குகளை ஐ. தே. க. பெற்றுள்ளது.

மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6,50,203 வாக்குகளைப் பெற்று 36 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இங்கு 59.55 % வாக்குகளை முன்னணி பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 4,22,125 வாக்குகளைப் பெற்று 22 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இக்கட்சிக்கு 38.66 % வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. ஜே. வி. பிக்கு இந்த மாகாணத்தில் எந்த ஆசனமும் கிடைக்கவில்லை. அக்கட்சி 15,416 வாக்குகளை மாத்திரமே மூன்று மாவட்டங்களிலும் பெற்றுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின்படி, ஐ. தே. க. அண்மைக் கால தேர்தல் வரலாற்றில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பல தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது.

வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி 4,97,366 வாக்குகளைப் பெற்று 24 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது மொத்த வாக்களிப்பில் 70.13% ஆகும். ஐ. தே. க. 193,548 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இது 27.29% வீத வாக்குகளாகும்.

ஜே. வி. பி. யின் தேர்தல் வரலாற்றில் இந்தத் தேர்தலில் பாரிய அரசியல் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே. வி. பி.க்கு வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. ஜே. வி. பி. ஆரம்ப காலத்தில் தேர்தலைச் சந்தித்த போது பெற்ற வாக்குகளைப் போன்று இந்தத் தேர்தலில் பெற்றுக் கொண்டுள்ளது.

நடந்து முடிந்த மாகாண சபைத்தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டிருந்ததால் நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் வாக்களிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியதாகத் தகவல்கள் தெரிவித்தன.

 அதே நேரம், தொழிலாளர்களின் வாக்குகள் பெருமளவில் நிராகரிப்புக்கும் உள்ளாகியுள்ளன. இதன் காரணமாகவும், இந்தத் தொகுதியில் ஐ. ம. சு. முன்னணிக்கு சிறு தொகை வாக்குகள் குறைவடைந்திருக்கலாமென அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும், பல தேர்தல் தொகுதிகளில் முன்னணி கூடுதலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பில் ஐ. ம. சு. முன்னணிக்குக் கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளதன் மூலம், அரச ஊழியர்கள் அரசாங்கத்துக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளமை நிரூபணமாகுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் இரு மாகாண சபைகளுக்கும் 106 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2247 பேர் போட்டியிட்டிருந்தனர்.

இவர்கள் 16 அரசியல் கட்சிகளிலும் 43 சுயேச்சைக் குழுக்களிலும் களமிறக்கப்பட்டிருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகளின்படி இரண்டு பிரதான கட்சிகளும் ஜே. வி. பி.யும் மாத்திரமே குறிப்பிடக் கூடிய பெறுபேற்றைப் பெற்றுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply