நாட்டுக்கு சிறந்த தலைமையும் வழிகாட்டலும் உள்ளதென்பதை தேர்தல் உணர்த்தியுள்ளது

மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேசிய தலை மைத்துவத்தி ற்கு வலுசேர்த்துள்ளதாக அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, மைத்திரி பால சிறிசேன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இந்தத் தருணத்திலாவது உண்மை நிலையைப் புரிந்து கொண்டு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரு மாறு அவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தேசிய தலைமைத்துவத்துடன் ஒன்றிணைந்து புதிய இலங்கையைக் கட்டியெழு ப்ப ஐக்கிய தேசியக் கட்சி முன்வர வேண்டு மென்று போக்குவரத்து த்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

“தேர்தல் முடிவுகளைப் பார்த்தவாது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தமது அரசியல் கருத்தியலை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா யூ.என்.பீ., ஜே.வி.பி என்று குறுகிய அரசியல் செயற்பாட்டை விடுத்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்துள்ள அமைச்சர் அழகப்பெரும, ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஜே.வி.பிக்கும் அழைப்பு விடுத்தள்ளார்.

நாட்டுக்குச் சரியான தலைமைத்துவமும், வழிகாட்டலும் உள்ளதென்பதை

இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்ற அதேவேளை அது மேலும் வலுவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தேசிய தலைமைத்துவத்திற்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜே.வி.பி இனிமேலாவது தமது அரசியல் கொள்கையை மீள்பரிசீலனை செய்யவேண்டுமென அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜே.வி.பி.யின் அரசியல் போக்கினை மக்கள் நிராகரித்துள்ளார்களென்பது தேர்தல் முடிவுகள் மூலம் புலனாகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply