வவுனியா கண்டன ஊர்வலம் சிறீ ரெலோ அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது
பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி யுத்தம் செய்வதைக் கைவிட வேண்டும் என்றும், அங்குள்ள பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவிட வேண்டும் எனவும் கோரி, வவுனியாவில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிறீரெலோ அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
அதேவேளை, போர்ப்பிரதேசத்தில் சிக்கியுள்ள பொதுமக்களின் உயிர் உடைமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதுடன், உயிர்ப்பலிகளைத் தடுத்துநிறுத்தி அமைதி வழியில் பிரச்சினைக்குத் தீர்வு காண, மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரும் முன்வரவேண்டும் என்றும், இதற்கு சர்வதேச சமூகம் வழியமைக்க வேண்டும் எனவும் கோரி, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரார்த்தனையிலும் உபவாசத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply