ஜனாதிபதி பாரியார் தலைமையில் அலரிமாளிகையில் மகளிர் தின வைபவம்
2013ம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டம் இன்று 8ம் திகதி காலை 9.00 மணிக்கு ஜனாதிபதியின் பாரியார் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறுகிறது. ‘குடும்பத்தினை பாதுகாக்கும் அவளை நாம் பாதுகாப்போம்’ என்ற தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கான சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.குடும்ப பொருளாதாரத்தை வலுப்படுத் துவதற்காகவும், தமது பிள்ளைகளின் பாதுகாப்பிற்காகவும் பெண்கள் ஆற்றிவரும் மகத்தான சேவைகளை கொண்டு பெண் களுக்கு கெளரவமான முறையில் நன்றி செலுத்தும் முகமாக இம்முறை சர்வதேச மகளிர் தின தொனிப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது என்று சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட, பிரதேச செயலகங்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று நடைபெறவுள்ள மகளிர் தின தேசிய விழாவின் போது நாட்டின் பல்வேறு துறைகள் ஊடாக தமது திறமைகளை வெளிக்காட்டி நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த 15 பெண்கள் ஜனாதிபதியின் பாரியாரி னால் விஷேட விருது வழங்கி கெளர விக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தாயாகவும், மகளாகவும், சகோதரியாகவும் சமூகத்தில் பல்வேறு பாத்திரங்களை வகிக்கும் பெண்களை பொருளாதார, சமூக ரீதியில் வலுவூட்டுவதற்கும் பால் வேறுபாடுகளை களைந்து ஏற்றத்தாழ்வுகளை அகற்றி பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பெண்ணாக பிறந்த காரணத்தினால் அல்லது வறுமை, துன்புறுத்தல் என்பவற்றுக்கு உட்படுகின்ற பெண்களை அதிலிருந்து விடுவித்து சமூகத்திலே தலை நிமிர்ந்து வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது பற்றி சமூகத்தை விழிப்பூட்ட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக இம்முறை மகளிர் தின செய்தியின் ஊடாக மக்களிடம் கொண்டு செல்லப்படவுள்ளது.
“பெண்கள் இன்று எதிர்நோக்கும் சவால்கள்” எனும் தலைப்பில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாலிகா ஹிம்புரேகம விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், ஏனைய சமய தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நாடளாவிய ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்தும் மகளிர் அமைப்பினர் உட்பட 2500ற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply