பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது: சல்மான் குர்சித்

பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று ஆசிய பசுபிக் அனைத்துலக வர்த்தக சம்மேளன மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அடுத்தவரின் பிரச்சினையில் நாம் எப்போதும் தலையிடுவதில்லை
மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவதில்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது.

ஆலோசனை கேட்காதவர்களுக்கும், பாதுகாப்பான, நல்ல ஆலோசனையை, சரியான நேரத்தில் இந்தியா வழங்கும். இந்தியா இயல்பாக செயற்படவே விரும்புகிறது.

எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியது அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டிய தேவையும் இல்லை.

அனைத்துலக அளவில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் வகையில் செயற்படுவதை இந்தியா எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. ஒரே நேரத்தில் இரு எதிரி நாடுகளுடன் நம்பிக்கையுடன் பேச இந்தியாவால் முடியும்.

மென்மையாக நடந்து கொள்வதாக இந்தியா மீது அடிக்கடி குற்றம் சாட்டப்படுவதுண்டு. உலக நாடுகள் அனைத்தும் செழிப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், யாருடனும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியதில்லை.

அதனால் உலக காவல்காரன் கருத்துக்கு நாங்கள் ஆதரவு அளிப்பதில்லை.
சீனாவிடமிருந்து கூட சில விடயங்களை கற்று, ஆரோக்கியமான போட்டியைச் சந்திக்கவே இந்தியா விரும்புகிறது.“ என்று அவர் தெரிவித்துள்ளார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply