ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் முன்பு மனித வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாதுகாப்பு அமைச்சக தலைமை அலுவலகத்தின் வாசலில் இன்று காலை நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயமடைந்தனர்.அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலாளர் சக் ஹகேல் காபூலில் தங்கியுள்ள வேளையில் நிகழ்ந்த இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சைக்கிளில் வந்த ஒரு மர்ம மனிதன் வயிற்றில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் பயங்கர சப்தத்துடன் அவன் உடல் சிதறி இறந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.

குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 5 பொதுமக்களை ராணுவ வீரர் ஒருவர் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினதையும் பார்த்ததாக அவர் கூறினார்.

இந்த குண்டு வெடிப்பின் ஓசை காபூல் நகர் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் சக் ஹகேல் மற்றும் அவருடன் சுற்றுப்பயணம் செய்யும் சர்வதேச நிருபர்கள் குழு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply