மீனவர் விவகாரம்: தமிழக அரசு மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

இரு நாட்டு மீனவர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உதவ வேண்டும் என தமிழக அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட காரைக்காலை சேர்ந்த மீனவர் செண்பகம் என்பவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மத்திய அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.இந்த சந்திப்புக்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய நாராயணசாமி, மீனவர் செண்பகம் தாக்கப்பட்டது, இந்திய கடல்பகுதியில் என தெரியவந்துள்ளது. இந்திய எல்லைக்குள் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது கண்டித்தக்கது. இது தொடர்பாக திங்களன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியை சந்தித்து தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளேன்.தமிழக கடலோரப் பகுதிகளில் ரோந்து படையினரின் கண்காணிப்பை அதிகரிப்படுத்துவது தொடர்பாக பேச உள்ளதாகவும் கூறினார்.

மேலும் அவர், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இரு நாட்டு மீனவர்களும் சந்தித்து பேச வேண்டும். இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு ஒத்துக் கொண்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் எனக்கேட்டு தலைமைச் செயலாளருக்கு 2 கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இதுவரை தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை என கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply