பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு தீ வைப்பு: 150 குடும்பங்கள் ஊரை விட்டு ஓட்டம்
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் ஜோசப் காலனி என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்துவரும் இந்த பகுதி முழுவதும் கிறிஸ்தவர்கள் வசித்துவருகின்றனர். சமான் மசி என்பவர் முஸ்லிம்களை அவமதித்ததாக தகவல் பரவியது. இதையடுத்து 3 ஆயிரம் முஸ்லிம்கள் திரண்டுவந்து அந்த காலனியை தாக்கினார்கள். சமான்மசி மற்றும் பலரது வீடுகளுக்கு தீ வைத்தனர்.முஸ்லிம்கள் திரண்டு வருவது தெரிந்ததும் சமான்மசி தப்பி ஓடிவிட்டார். அதனால் அவரது தந்தையை கலவர கும்பல் அடித்து உதைத்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுக்க முயற்சித்தனர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் மீது கல்வீசினார்கள். இதில் பல போலீசார் காயம் அடைந்தனர். 150 குடும்பம் ஓட்டம் கிறிஸ்தவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களை தெருவில் போட்டு அவற்றுக்கு தீ வைத்தனர்.
இந்த தாக்குதலை அடுத்து 150 குடும்பத்தினர் ஊரை காலி செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். முஸ்லிம்களை அவமதித்ததாக சமான்மசி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply