இலங்கையை இந்தியா கடைசியாக எச்சரிக்க வேண்டும்:பொன் ராதாகிருஷ்ணன்
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க இலங்கைக்கு இந்தியா கடைசி எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் கரூரில் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தார்.மேலும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு தீர்வு காண, இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply