இலங்கைக்கு எதிரான தீர்மானம்:ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தாக்கல்
சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி சுதந்திரமான, நம்பகத்தன்மையுடைய சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷனின் ஆணையர் கூறியிருப்பதைக் கவனத்தில் கொள்வதாக இந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் இந்தத் தீர்மானத்தில் மனித உரிமை கமிஷனின் ஆணையர் கூறியிருக்கும் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசின் ஒப்புதலுடன் மனித உரிமை ஆணையம் அறிவுரைகளைத் தர வேண்டும் போன்றவை இந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிடும்போது, சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், அகதிகளுக்கான சட்டங்களை சம்பந்தப்பட்ட நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள விவரங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், அதிகாரபூர்வமான முறையில் வெள்ளிக்கிழமையன்று இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply