இந்தியா – பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைகின்றன

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான உயிரிழப்புகள் இந்தியாவில் குறைந்துள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக பயங்கரவாதம் தொடர்புடைய இறப்புக்கள் மூன்று இலக்கத்தில் அதாவது ஆயிரத்துக்கும் குறைவாக கடந்த ஆண்டு பதிவாகியுள்ளன.என்ற இணைய தளம் தொகுத்துள்ள விபரங்களின்படி, கடந்த 1994 ஆம் ஆண்டு இந்தியாவில் 4032 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் பொது மக்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் அடங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டு 5300 தாண்டியிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நாட்டில் மொத்தம் 804 பேரே பயங்கரவாதம் தொடர்பிலான வன் செயல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

உலக அளவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்து வருகிறது. அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளும் வன்செயல்களால் கடந்த இரு தசாப்தங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

பயங்கரவாதச் செயல்களை ஒடுக்க உலகளாவிய ரீதியில் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புகள் மேம்பட்டதும், உள்நாட்டில் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுகளின் தொழில்நுட்பத் திறன் கூடியதும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரியான கேணல் டி என் ராமன் தமிழோசையிடம் தெரிவித்தார். அதேநேரம் தீவிரவாதிகள் இலக்கு வைத்துக் கொலை செய்யும் சம்பவங்கள் குறையவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீரிலும் பல தசாப்தங்களாக ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தவிர தலைநகர் புது டெல்லி, மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்கள் அடிக்கடி குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகின்றன. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் தற்போதைக்கு மாவோயிஸ்டுகள்தான் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply