பொதுநலவாய மாநாடு விவகாரத்தில் பிரித்தானியா இலங்கைக்கு எதிராக செயற்பட வேண்டும்
பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்று முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு பிரித்தானிய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என பிரித்தானிய முன்னாள் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபேன்ட் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் மனித உரிமை விடயங்களை கருத்திற் கொண்டு பிரித்தானிய அரசு இந்த முடிவை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இலங்கை பாதிக்கப்பட்ட அல்லது சர்சதேச சமூகத்தால் தேர்வு செய்யப்பட்ட நாடு அல்ல என டேவிட் மில்லிபேன்ட் குறிப்பிட்டுள்ளார். 2009 ஆரம்பத்தில் வெளிவிவகார அமைச்சர் பேர்நாட் குச்சநாருடன் இலங்கை சென்று முகாம்களுக்கு விஜயம் செய்தபோது தமிழ் பெண்கள் காகிதத்தில் தனது கணவர் மற்றும் பிள்ளைகளின் பெயர்களை எழுதி கண்டுபிடித்துத் தருமாறு கண்ணீர் விட்டதை மறக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
330,000 பொது மக்கள் வன்னி நிலப்பரப்பில் இருந்த நிலையில் 2011 ஐநா அறிக்கையில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்ட தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பும் சர்வதேச சட்டங்களை மீறி செயற்பட்டுள்ளதென டேவிட் மில்லிபேன்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply