பாக்-இரான் எரிவாயுக் குழாய் திட்டம் தொடக்கம்

அதிபர்கள் , இரு நாடுகளையும் இணைக்கும் எரிவாயுக் குழாய்த் தொடரை தொடங்கி வைத்துள்ளனர். பாகிஸ்தானின் எரிசக்திப் பற்றாக்குறையைக் குறைக்கும் ஒரு வழியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது. ஆனால் பகிஸ்தானின் உடனடி எரிசக்திப் பற்றாக்குறையை இது தணிக்காது என்று கூறும் அமெரிக்கா, இரானின் அணு சக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்கு எதிராக தடைகளைக் கொண்டுவரப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறது.இந்த இரு நாடுகளுக்குமிடையே உள்ள எல்லைப்புறத்தில் நடந்த வைபவத்தில் பேசிய , இரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத், இந்த எரிவாயுக்குழாய்க்கும் அணு சக்தித்திட்டத்துக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.

இரான் இத்திட்டத்தில் அதன் பங்கை ஏறக்குறைய நிறைவேற்றிவிட்டது. ஆனால் பாகிஸ்தான் அதன் பகுதிக் கட்டுமானத்தை இன்னும் தொடங்கவில்லை.

இத்திட்டம் முன்பு இரானிய எரிவாயுவை, பாகிஸ்தானைத் தவிர, இந்தியாவுக்கும் கொண்டு செல்வதாக இருந்தது. ஆனால் இந்தியா இத்திட்டத்திலிருந்து விலகிவிட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply