புதிய போப் ஆண்டவர் தேர்வு: இந்தியாவில் இருந்து முதல்முறையாக 5 கர்தினால்கள் பங்கேற்பு
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணி பீட்டர் தேவாலயத்தின் 16-வது விசேஷ ஆலயத்தில் இன்று தொடங்கியது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து தேர்வில் பங்கேற்கும் 115 கர்தினால்களும் வாடிகன் நகருக்கு வந்து விட்டனர். இன்று தொடங்குகிறது. இக்கூட்டத்திற்கு வாடிகன் கர்தினால்கள் பல்கலைக்கழக டீன் ஆஞ்சலோ சுதானோ தலைமை தாங்குகிறார். முதலில் கர்தினால்கள் புதிய போப் ஆண்டவர் தேர்வுக்கான நடைமுறைகளை விவாதிப்பார்கள். தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பு நடக்கும். 7 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு) தொடங்கும். இதற்கு முன்பு நடந்த போப் ஆண்டவர் தேர்வுகள் அனைத்தும் ஒருசில நாட்களிலேயே முடிவடைந்து உள்ளன. அதுபோலவே இம்முறையும் நல்ல முடிவு அடுத்த சில நாட்களில் ஏற்பட்டு விடும் என்று கத்தோலிக்கர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். போப் ஆண்டவர் தேர்வில் பங்கேற்கும் 115 கர்தினால்களில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து 5 கர்தினால்கள் பங்கேற்றுள்ளனர். சீரோ மலபார் கத்தோலிக்க பேராயர் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி, சீரோ மலங்கரை கத்தோலிக்க பேராயர் மார் பசலியோ கிளிமிஸ் கத்தோலிக்க பாவா, மும்பை ஆர்ச் பிஷப் கோஷ் வால்ட், மும்பை முன்னாள் ஆர்ச் பிஷப் ஐவான் பயஸ், ராஞ்சி ஆர்ச் பிஷப் டெலஸ்போர் போஸ்போ ஆகிய 5 பேரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply