மீனவர்கள் மீதான தாக்குதல் இந்தியா மீது அறிவிக்கப்படாத போரை நடத்துவதைப் போல உள்ளது: பொன். ராதாகிருஷ்ணன்
இலங்கை மீனவர்கள் கூட இந்திய எல்லைக்குள் வரும் போது அவர்களை தாக்கியதாகவோ, துன்புறுத்தியதாகவோ எந்த புகாரும் இல்லை. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது இந்தியா மீது அறிவிக்கப்படாத போரை நடத்துவதைப் போல உள்ளது என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலகில் எந்த பகுதியிலும் இத்தகைய தாக்குதல் இல்லை. எல்லை தாண்டும் மீனவர்கள் துன்புறுத்தப்படுவதில்லை.
2009இல், இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரில் தமிழர்கள் இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்கள் தற்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த போருக்கு பின்புலமாக இருந்து நடத்தியது மத்தியில் ஆளும் காங்கிரஸ். அரசு.
வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. பாஜக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். பாஜகவைச் சேர்ந்தவர் பிரதமராக வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. பாஜகவும் பிரதமருக்கான தலைவரை நிலைநிறுத்தியிருக்கிறது.
அதனை மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் மத்தியில் பாஜக அமைக்கும் கூட்டணியை அடிப்படையாக வைத்து தமிழகத்திலும் கூட்டணி அமைக்கப்படும்.
இலங்கை தமிழர்களுக்காக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். பாஜக சார்பில் இலங்கை தமிழர்களின் பிரச்னையை முன்னிறுத்தி மார்ச் 19 முதல் ஒரு வாரத்துக்கு பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இதேவேளை தமிழக காவல்துறையினரால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply