மதத்தை பாதுகாக்கும் போர்வையில் யாரும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது!

எந்தவொரு குழுவிற்கும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதியளிக்க முடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மதத்தை பாதுகாக்கும் போர்வையில் நாட்டின் எந்தவொரு நிறுவனமோ அல்லது அமைப்போ சட்டத்தை கையில் எடுக்க இடமளிக்கப்பட மாட்டாது. நாட்டின் சட்டம் அனைத்துத் தரப்பினருக்கும் சமமானது

மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சரவையின் துணைக்குழுவொன்று ஆராய உள்ளது. அரசாங்கம் இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றது.

நாட்டில் இன மற்றும் மத முரண்பாடுகள் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply