இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தானிடம் முறைப்பாடு
இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் தூதுவரிடம் முறைப்பாடு செய்ததாக தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளரான அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் விவகாரம் பற்றிய பேச்சுக்களின்போது, பாகிஸ்தானும், இந்தோனீசியாவும் ”இலங்கையில் முஸ்லிம்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது” என்ற வகையில் பேசியதாக கூறிய அசாத் சாலி, அது தவறு என்றும் ஆகவே அவர்களுக்கு அது குறித்து விளக்கும் வகையில் இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவரைக் கண்டு தாம் பேசியதாகக் கூறியுள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் போது, அவர்கள் ஹலால் போன்ற பல பிரச்சினைகள் எதிர்கொள்ளும்போது அந்த இரு நாடுகளும் இவ்வாறு பேசியது தவறு என்று கூறும் அவர், ஆகவே அது குறித்து இந்த நாடுகள் ஐநாவில் சரியான கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தூதுவரிடம் தாம் கேட்டதாக தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி, ஒலி-ஒளி செய்திகள்You can leave a response, or trackback from your own site.
Leave a Reply