வடபகுதி அபிவிருத்தி தொடர்பில் பிரித்தானிய புலம்பெயர் அமைப்புகள் திருப்தி
இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிக்கவும் இங்கு முதலீடு செய்யவும் தயாராக இருப்பதாக பிரித்தானியாவிலுள்ள புலம் பெயர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அரசாங்கம் வடபகுதியில் முன்னெடுக்கும் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அவை திருப்தி வெளி யிட்டுள்ளன. அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்து அங்குள்ள தமிழ்இ சிங்கள மற்றும் முஸ்லிம் புலம் பெயர் அமைப்புகளை சந்தித்து பேச்சு நடத்தியது. இதன் போதே புலம் பெயர் அமைப்புகள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்து ள்ளன. தமிழ் டயஸ் போராக்களிடம் முன்னர் காணப்பட்ட கடும் போக்கு ஓரளவு மாறியுள்ளதாக இந்தக் குழுவில் அங்கம் வகித்த ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரி வித்தார்.
லண்டன் சென்றிருந்த எம்.பிக்கள் குழு இந்த வாரம் நாடு திரும்பியதோடு ஹுனைஸ் பாரூக் எம்.பி. நேற்று நாடுதிரும்பியிருந்தார். வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை யர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு ள்ள இரட்டை பிரஜா உரிமை பெறுவதில் இறுக்கமான போக்கை தளர்த்துமாறும் டயஸ் போராக்கள் இதன் போது கோரி யுள்ளன.
அதிகாரப் பகிர்வுஇ வடக்கில் இரா ணுவத்தின் பிரசன்னம்இ காணி விவகாரம்இ ஜெனீவா மாநாடுஇ முஸ்லிம்களுக்கெதி ரான நெருக்குதல்கள்இ சட்டம் ஒழுங்கை பேணுதல் உட்பட பல விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன. இலங்கை எம்.பிக்கள் குழுவினர் தற்போதைய நாட்டு நிலைமைகள் குறித்தும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் இங்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த விஜயத்தில் ஐ.ம.சு.மு. சார்பாக ஹுனைஸ் பாரூக் எம்.பி. வசந்த சேனாநாயக்க எம்.பி.இ செஹான் சேரசிங்க எம்.பியும் ஐ.தே.க. சார்பாக ஹரீம் பெர்ணாந்து எம்.பி.இ நிரோசன் பெரேரா எம்.பி. ஆகியோரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக எஸ். சுமந்திரன் எம்.பியின் செயலாளர் பாலசந்திரனும் பங்கேற்றனர்.
வேல்ஸில் அந்நாட்டு எம்.பிக்களுடன் அதிகாரப் பகிர்வு தொடர்பான கலந்துரையாடலில் இலங்கைக்குழு பங்கேற்றது. பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் சென்று அதன் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது. தமிழ் டயஸ் போராக்களுடனான சந்திப்பு லண்டன் மிர்சா மண்டபத்தில் நடைபெற்றது. நாட்டில் முன்னெடுக்கப் படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் நல்லிணக்க முயற்சிகள் பற்றியும் எம்.பிக்கள் விளக்கியுள்ளனர்.
வடக்கில் இராணுவத்தின் செயற்பாடுகளை குறைப்பது குறித்தும் பொதுமக்களின் காணிகளை மீள வழங்குவது குறித்தும் தமிழ் டயஸ் போராக்கள் இங்கு கருத்துத் தெரிவித்ததாக ஹுனைஸ் பாரூக் எம்.பி. கூறினார். சட்டம் ஒழுங்கை முறையாக செயற்படுத்தப்படுவது பற்றியும் அவை கருத்து வெளியிட்டுள்ளன. டயஸ் போராக்கள் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி குறித்தும் பேசியுள்ளன. விசாரணையின்றி உள்ள தமிழ் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கேட்டுள்ளனர்.
சிங்களஇ முஸ்லிம் புலம்பெயர் சமூகங்களுடனான சந்திப்பு லண்டன் பார்க் பெலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கை யில் சட்டம் ஒழுங்கை முழுமையாக கடைப்பிடிப்பது பற்றியும் அதிகாரப் பகிர்வு குறித்தும் சிங்கள புலம்பெயர் சமூகம் இலங்கை எம்.பி.க்களிடம் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தின.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply