24 மணிநேரத்திற்குள் இந்திய மீனவர்கள் 79 பேர் கைது
கச்சதீவில் வைத்து இந்திய மீனவர்கள் 60 பேர் இன்று (14) காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பன் மீனவர் சங்க தலைவர் யூ. அருளாயனந்தம் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கை கடற்படையினரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட மீனவர்கள் 20 பேர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இராமேஸ்வரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் யூ. அருளானந்தம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று (13) இரவு 19 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கை கடற்படையினரால் 79 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply