இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து திருப்தியில்லை!
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் எலியோட் என்கில் கோரிக்கை விடுத்துள்ளர். இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலை நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கு, எலியோட் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.இலங்கை அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே அமுல்படுத்த தயக்கம் காட்டி வருவதாகவும், பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் கோர வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டு வரும் புனர்வாழ்வு மற்றும் புனரமைப் முனைப்புக்கள் பாராட்டுக்குரியவை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், யுத்தம் ஏற்படுவதற்கான ஏதுக்களுக்கு இதுவரையில் காத்திரமான தீர்வுகள் முன்வைக்கப்படாமை வருத்தமளிப்பதாக எலியோட் சுட்டிக்காட்டியுள்ளார்.
எலியோட் என்கில் அமெரிக்க காங்கிரஸ் சபையின் முக்கிய சிரேஸ்ட உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply