ஐ.நாவில் பாரதவின் சகோதரி இன்று உரை
ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர குடும்பத்தின் ஆறு அங்கத்தவர்கள் பங்குபற்றுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இங்கையின் அரசியல் படுகொலைகளைப்பற்றி இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றுவார்.
ஜெனிவாவா மனித உரிமைகள் அமர்வில் உரையாற்றுவதற்காக பிரேமச்சந்திர குடும்பத்தினருக்கு மனித உரிமை பேரவை அழைப்பு விடுத்ததாக பிரேமச்சந்திரவின் மூத்த சகோதரி சித்திரா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
சித்திராவுக்கு மற்றும் பிரேமச்சந்திரவின் சகோதர சகோதரிகள் யாவரும் கனடாவில் வாழ்கின்றனர்.
சுவர்ணா குணரத்னவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் உரையாற்றவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply