ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் வரும் 18இல் திறப்பு

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் எத்தகைய விமானங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கும் வகையில் 2 1/2 இலட்சம் லீற்றர் எரிபொருள் களஞ்சியப்படுத்தக்கூடிய எண்ணெய்த் தாங்கியொன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சு தெரிவித்தது.
எந்தச் சந்தர்ப்பத்திலும் எரிபொருள் விநியோகிக்கும் வகையில் 40 மில்லியன் டொலர் செலவில் 03 மில்லியன் லீற்றர் எரிபொருள் களஞ்சியப்படுத்தும் எரிபொருள் களஞ்சியத் தொகுதி ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட உள்ளது. இங்கு வரும் விமானங்களுக்கு எரிபொருள் வழங்க ஏற்றவாறு எரிபொருள் களஞ்சியம் அமைக்கப்பட்டுள்ளதோடு இதனை விஸ்தரிக்கவும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

உலகிலுள்ள எந்த விமான நிலையத்துடனும் போட்டியிடக்கூடியவாறு சிறந்த விலையில் எரிபொருள் விநியோகிக்க உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

மத்தள விமான நிலையம் இயங்க ஆரம்பித்ததும் ஹம்பாந்தோட்டை துறைமுக களஞ்சியத் தொகுதியின் அளவை 23 மில்லியன் லீற்றராக அதிகரிக்கவும் திட்டமிடப்பட் டுள்ளது.

இதனூடக தாமதமின்றி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பெற்றோலிய கைத்தொழில் அமைச்சு கூறியது. உலகில் தலைசிறந்த தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி மத்தள விமான நிலைய களஞ்சியத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply