தேசிய மனித உரிமைகள் திட்டம் குறித்து விரைவில் விசேட அறிக்கை

ஐநா மீளாய்வு கூட்டத்தில் இலங்கையுடன் சாதகமான நிலையில் இருந்த ஐநா மனித உரிமை உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கை குறித்து தவறான தகவல்களை வெளியிட்ட நாடுகள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார். ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இன்று (15) உரையாற்றிய போதே மஹிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கவுன்ஸில் மூலம் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. 110 பரிந்துரைகளை முன்வைக்கப்பட்டன. அதில் மூன்றை இலங்கை செயற்படுத்தியுள்ளது. 91 பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக் கொள்ளவில்லை.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை உள்ளிட்ட 12 பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக் கொண்டது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளை இலங்கை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் மற்றும் ACF தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்டமை குறித்து சட்ட மா அதிபரின் பணிப்புக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யுத்தத்தின் உயிரிழப்புக்கள் குறித்து பல பிரிவினர் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் 2010/2011 மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீடு அதில் கவனம் செலுத்தியது.

தேசிய மனித உரிமைகள் அதிரடி ஐந்தாண்டு திட்டம் தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை இலங்கை விரைவில் வெளியிடும்.

இலங்கைக்கு ஐநா மனித உரிமை ஆணைக்குழு வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி. இலங்கை தொடர்ந்தும் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படும்.

இலங்கை மக்கள் தொடர்பில் எதிர்வரும் அமர்வுகளில் ஒரு சாதகமான முடிவை நாம் எதிர்பார்க்கிறோம்.

மேற்கண்டவாறு மஹிந்த சமரசிங்க உரையாற்றினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply