இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் இந்தியா இன்னும் தீர்மானிக்கவில்லை
இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதனை இந்தியா இன்மும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமானதும், நீதியானதும், வெளிப்படையானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என்பதனை இந்தியா வலியுறுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இறுதிக் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், தீhமானம் எடுக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றில் அது குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் மிகவும் பொருத்தமான தீர்மானத்தை மத்திய அரசாங்கம் எடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply