சிங்கள பௌத்தர்களின் குறைகளை கேட்பதற்கு குழு
இலங்கையின் உரிமையாளர்களான சிங்கள பௌத்தர்கள், சிங்கள பௌத்தர்கள் என்ற காரணத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எவரும் தலையிடுவதில்லை என்பதால், பௌத்தர் தம் குறைகேள் அதிகாரிகளை கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது. சிங்கள பௌத்தர்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த பௌத்த குறைகேள் அதிகாரிகள் (ஒம்புட்மேன்ஸ்;) குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனாவின் உறுப்பினர்களே இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். சிங்கள பௌத்தர்கள் என்ற காரணத்தினால் தமக்கு அநீதி ஏற்பட்டிருந்தால் அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு பொதுபல சேனா சிங்கள பௌத்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply