ஜெனீவா தீர்மானம் நிரந்தர அரசியல் தீர்விற்கு வழி வகுக்க வேண்டும்!
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பாக ஜெனிவாவில் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இலங்கைத்தீவில் ஒரு நிரந்தரமான அமைதியை, நிரந்தரமான அரசியல் தீர்வை கொண்டுவரக்கூடியதாக ஒருவித சமநிலையுடன் இருக்க வேண்டும் என்று இலங்கையின் செய்தித்துறை ஆய்வாளர்களில் ஒருவரான கருணாகரன் கூறியுள்ளார்.
மேற்குலக நாடுகள் தங்களது நலன்களை மையமாகக் கொண்டே இந்த தீர்மானத்தை கொண்டுவருவதான ஒரு தோற்றப்பாடே இந்த தீர்மானம் குறித்து பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் இருப்பதாகக் கூறும் கருணாகரன், ஆனால், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இந்த தீர்மானம் ஒரு தீர்வுக்கு வழி செய்யுமானால் பரவாயில்லை என்ற நிலைப்பாடு காணப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்.
இலங்கை அரசாங்கத்தை ஒரு சிங்கள அரசாங்கமாக பார்க்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள், உள்ளூரில் ஒரு நிரந்தரமான தீர்வை அந்த அரசு தரவில்லை என்ற காரணத்தினால், இத்தகைய ஒரு வெளி அழுத்தம் ஒரு நியாயமான தீர்வுக்கு வழி செய்யுமாக இருந்தால் அதனை வரவேற்கத்தக்கதாகப் பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
அதேவேளை இந்த ஜெனிவா நிகழ்வுகள் குறித்து சிங்கள மக்களுக்கும் சிறுபான்மையின மக்களுக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் அங்கு ஏற்கனவே இருக்கின்ற இரு தரப்புக்கும் இடையிலான இடைவெளியை மேலும் அதிகரித்துவிடக் கூடாது என்றும் கருணாகரன் எச்சரிக்கிறார்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டவருக்கான தண்டனை என்பது அதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்குமான தண்டனை என்று இல்லாவிட்டால், அதுவும் மக்கள் மத்தியில் நிலைமையை மோசமாக்கிவிடும் என்றும் அவர் கூறுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply