தமிழகத்திலுள்ள இலங்கை அரசு தொடர்பான அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்ற பௌத்த பிக்கு ஒருவர் மீது தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் இலங்கை அரசு சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சென்னை எழும்பூர் கென்னத்லேனில் உள்ள புத்தமடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான சிங்களர்கள் வந்து தங்குகிறார்கள். 

பௌத்த பிக்குகளும் வருகை தருகிறார்கள். தற்போது அங்கு 140 சிங்களர்களும், 12 பௌத்த பிக்குகளும் தங்கியுள்ளனர்.

இதனால் இங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். எழும்பூர் காஜா மேஜர் வீதியிலுள்ள இலங்கை வங்கி, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஏர்லைன்ஸ் அலுவலகம் ஆகியவற்றிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருப்பதிக்கு சென்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply