தமிழகம் செல்லும் இலங்கையர்களுக்கு பயண எச்சரிக்கை

தமிழகம் செல்லும் இலங்கையர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தமிழகம் செல்லும் இலங்கையர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணத்திற்காக தமிழகத்திற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் முன்கூட்டியே, சென்னைக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இந்தியாவின் தமிழகத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் வருத்மளிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் சில கடும்போக்காளர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply