நாட்டிற்கு எதிரான பிரச்சினையை அதிகரிக்கச் செய்தது அரசே
தேரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாம் கண்டிக்கின்றோம். அரசாங்கமே பிரச்சினையை கூட்டியுள்ளது. இந்து மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சாபத்தினாலேயே உலகிலேயே இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இந்தியாவில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சம்பவங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே பொறுப்புக்கூறிவேண்டும்’ என்று புதிய இடதுசாரி முன்னிணியி தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
‘நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முறையாக அமுல்படுத்தியிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. தேசிய ரீதியில் தீர்த்துவைக்க வேண்டிய பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறிவிட்டது. வடக்கில் நிலைமை மோசமானதாகும் படைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதுடன் ஜனநாயகம் அங்கில்லை. அரசியல்வாதிகள் மக்களுடன் வெளிப்படையாக பேசமுடியாது’ என்றார்.
வடக்கு மக்கள் ஜனாதிபதி, நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன அந்த தேர்தல்களில் எல்லாம் அம்மக்கள் வாக்களித்தனர். ஆனால் பிரச்சினைக்கு ஓரளவிற்கேனும் தீர்வு காணுகின்ற வடமாகாண சபைக்கான தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை இதனை யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்று அவர் மேலும் கூறினார்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றோம் என்று கூறிக்கொள்பவர்கள் தங்களுடைய ஆடைகளை களையவேண்டும். வடக்கு கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் எந்தவிதமான அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. அபிவிருத்தி எனும் பெயரில் நிதி கொள்ளையடிக்கப்படுகின்றது என்றும் அவர் சொன்னார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply