வருடங்களில் பாதுகாப்புச் செலவு 774 பில்லியன் ரூபா: பிரதமர்

2000ஆம் ஆண்டு முதல் இதுவரை 774 பில்லியன் ரூபா பாதுகாப்புக்காகச் செலவுசெய்யப்பட்டிருப்பதாக பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.  
 ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வாய்மூலம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

“2000ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் இராணுவத்தினருக்கு 592 பில்லியன் ரூபாய்களையும், விமானப்படைக்கு 91 பில்லியன் ரூபாய்களையும், கடற்படைக்கு 32 பில்லியன் ரூபாய்களையும், பொலிஸாருக்கு 49 பில்லியன் ரூபாய்களையும் செலவுசெய்துள்ளது. தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கும் பெருமளவு பணத்தை செலவு செய்துள்ளது” என்றார் அவர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் மக்களை விடுவித்திருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக மக்களே தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில் தேர்தல்கள் நடத்தப்பட்டதாகக் கூறினார்.

“மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நாங்கள் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தினோம். கிழக்கின் உதயம் திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் பல அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. வடக்கின் வசந்தம் மூலம் வடபகுதியிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும். ஏ௯, ஏ௩2 வீதிகள் புனரமைக்கப்படும். யாழ்ப்பாணத்துக்கு புகையிரதசேவைகள் ஆரம்பிக்கப்படும்” என்றார் பிரதமர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply