திமுக ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை!

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொண்ட நிலையில் திடீரென திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் கடுமையான திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.  

ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொண்டது. இந்நிலையில் சென்னையில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் இன்று அதிகாலை 7.15 மணி முதல் காலை 8.10 மணி வரை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மு.க.ஸ்டாலினின் நண்பர் ராஜாசங்கரின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply