அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் – இந்தியா
13ம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என இந்தியா இலங்கையை வலியுறுத்தியுள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் இலங்கையில் நல்லிணக்கம் அரசியல் தீர்வு, மனித உரிமை போன்ற விடயங்களை மேம்படுத்தவென கிடைத்த புதிய சந்தர்ப்பம் என இந்தியாவின் ஜெனிவா தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2009ம் ஆண்டு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மந்தநிலை காணப்படுவதாகலும் இந்தியா இது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கு பகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேசம் ஏற்றுக் கொள்ளக்கூடிய சுதந்திர விசாரணை நடாத்தப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
வடக்கில் இராணுவத்தினர் அகற்றப்பட்டு, காணிகள் உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாகவா எதிராகவா வாக்களிப்பது என இந்திய இறுதி முடிவு அறிவிக்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply