உள்நாட்டு பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தும் முயற்சியே அமெரிக்க தீர்மானம்
இலங்கையிலுள்ள பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தும் விடாமுயற்சியின் வெளிப்பாடாகவே இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கருத முடியும்’ என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிராக பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியுற்ற நிலையில் நாடாளுமன்றில் அது குறித்து பேசிய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
‘இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் அரசாங்கத்தின் சாதனைகள் குறித்து பட்டும் படாமலும் மனமில்லாமலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கத்தின் சாதனைகளை அங்கீகரிப்பதாக தமக்கு உறுதி தரப்பட்டிருந்தது’ என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
‘இந்த தீர்மானத்துக்கு ஒரு புவியியல் பரிமாணம் உண்டு என கூறிய அமைச்சர் பீரிஸ்,பிரேரணையை ஆதரித்த நாடுகளில் அதிகமானவை ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்தவையாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘உலகில் எத்தனையோ பிரச்சினைகள் தீர்வு வேண்டி அவதியுறும்போது இலங்கை மீது குற்றம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply