அசாத் சாலி​ குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணி தலைவர் அசாத் சாலியை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். இன்று முற்பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அசாத் சாலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அத தெரணவிற்கு கருத்து தெரிவித்த அசாத் சாலி, விசாரணைக்கான காரணம் எதுவும் தமக்கு கூறப்படவில்லை என்று குறிப்பிட்டார். நேற்று (21) தனது வீட்டுக்குச் சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர் தான் அங்கு இல்லாததால் தன்னை அலுவலகத்திற்கு தேடி வந்ததாகவும் அங்கும் தன்னை கண்டுகொள்ள அவர்களால் முடியவில்லை எனவும் அசாத் சாலி குறிப்பிட்டார்.

எனினும் ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்பட்ட தோல்வியை மறைப்பதற்காகவே அரசாங்கம் இந்த வேலையை மேற்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள காரணத்தை அறிய சட்டத்தரணிகள் இருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கையில் பௌத்த பிக்குகள் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து அண்மையில் தாம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்திருந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறலாம் என்று சந்தேகிக்கப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply