இராணுவத்திற்கு மேலும் தமிழ் பெண்கள் இணைத்துக் கொள்ளப்படுவர்

இலங்கைஇராணுவத்தில், எதிர்ப்புகளுக்கு மத்தியில் முதன் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்ட 95 தமிழ் யுவதிகள் தமது இராணுவ பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற பயிற்சி நிறைவு தின வைபவத்தில், இராணுவத்தின் மூத்த தமிழ் அதிகாரியான பிரிகேடியர் ஆர்.ரட்னசிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ள தமிழ்ப் பெண்கள் இராணுவத்தின் நிர்வாகச் செயற்பாடுகளில் கணணி இயக்குனர்கள், எழுதுவினைஞர்கள் மற்றும் தாதியர் உதவியாளர்கள் போன்ற பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

தமது பிள்ளைகள் இராணுவத்தில் இணைந்து தொழில் வாய்ப்பைப் பெற்றிருப்பது குறித்து, இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்த பெற்றோர்கள் சிலர் திருப்தியும் மகிழ்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்தத் தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டபோது பலதரப்பினரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply