இலங்கையை இந்தியா எதிரி நாடாகப் பார்க்கவில்லை!

இலங்கையை இந்தியா எதிரி நாடாகப் பார்க்கவில்லை. அங்கு ஆட்சி கவிழ்ந்தாலும் இந்தியா எமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடை பெற்றது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடை யில் நீண்டகால உறவு காணப்படுகிறது. இலங்கை தமது எதிரி நாடல்ல என இந்திய அமைச்சர் சிதம்பரம் தெளிவா கக் கூறியுள்ளார். உள்ளக அரசியல் தேவைகளுக்காகவே அங்கு இலங்கை விவகாரம் தொடர்பில் முடிவுகள் எட் டப்படுகிறது.

எமது நாட்டைப் போன்று இந்தியாவுக்கும் பல்வேறு அழுத்தங்கள் உள்ளன. லங்கையோ இந்தியாவோ தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளல்ல. இங்கு அரசியல் நெருக்கடிகள் இருக்கவே செய்கின்றன. இந்திய அரசுக்கு பாரிய அழுத்தங்கள் உள்ளன. இலங்கையை எதிரி நாடாகப் பார்த்து இந்தியா ஒரு போதும் செயற்படவில்லை.

இலங்கைக்கு ஆதரவாக மட்டும் இந்தியா செயற்பட வேண்டும் என எதிர்பார்ப்பது அநீதியாகும். தமது வட்டத்திற்குள் தரக்கூடிய முழுமையான ஆதரவை இந்தியாவிடமி ருந்து எதிர்பார்க்கிறோம். தமிழ் நாட்டில் இலங்கையரை தாக்கியது தொடர் பில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பில் மத்திய அரசு செயற்பட்டு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டு டனன்றி மத்திய அரசுடனே நாம் செயற்படுகிறோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply