சண்டையில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்ற இந்தியா உதவத்தயார் : இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி

வன்னியில் சண்டை நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற இந்தியா உதவத் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் இன்று கருத்துவெளியிட்ட பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசாங்கத்துடனும், ஐ.சி.ஆர்.சி.யுடனும் இணைந்து போர் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இந்தியா உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று என இங்கு குறிப்பிட்ட அவர் “அது தமிழ் சமூகத்துக்கு அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நலன்களுக்காக விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பதுடன், தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் அமைதிப் பேச்சுக்கு உதவத் தயார் என்று அண்மையில் இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் அறிவித்திருந்தமை இங்கு குறிபிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply