சர்வதேச சமூகத்தின் சொல்லை இலங்கை கேட்க வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போரின் போது, படையினரால் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும்படி இலங்கையிடம் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

இலங்கை இதுவரையில் நடைமுறைப்படுத்தாத திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேச சமூகத்தின் சொல்லைக் கேட்க வேண்டும். உங்களுக்குத் தெரியும், நாம் முன்வைத்த தீர்மானத்தை வரவேற்று 25 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

தனது சொந்த மக்களுக்கு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறலில் இன்னமும் நிறைவேற்றப்படாத விவகாரங்களுக்குப் பதிலளிப்பதற்கு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை, தீர்மானம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு நாம் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தோம். வொசிங்டனுக்கு வந்த இலங்கையின் மூத்த அதிகாரி உள்ளிட்டோரிடம், நாம் மிகத்தெளிவாகவே கூறியிருந்தோம்.

நீங்கள் முன்னே அடியெடுத்து வைக்காவிட்டால் நாம் இதேபோன்று மீண்டும் தீர்மானத்தை கொண்டு வருவோம் என்று அவர்களிடம் கூறியிருந்தோம். அது ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்தது. ஆனால் எந்த முன்னேற்றத்தையும் நாம் காணவில்லை.

மீண்டும், இலங்கை என்ன முடிவுகளை எடுக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும். நாம் முன்னரே கூறியது போன்று, அவர்கள் எதையும் செய்யவில்லையென்று சர்வதேச சமூகம் கருதினால், நாம் அடுத்த அடிகளை எடுத்து வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply