அகதிகள் முகாமில் தீ: 30 பேர் உடல்கருகி பலி
தாய்லாந்தில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உடல்கருகி பலியாயினர். தாய்லாந்து-மியான்மர் எல்லைப்பகுதியான வடக்கு மாயே ஹாங்சன் மாகாணத்தில், மாயேசூரின் என்ற அகதிகள் முகாம் உள்ளது. இங்கு மியான்மரில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இங்கு நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் 30 பேர் உடல்கருகி பலியாயினர்.
200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வீட்டில் சமையல் செய்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்கு உத்தரவிட்டு்ள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply