காணாமற்போனோர் தொடர்பில் வழக்கு: ஜெனீவாலில் அரசு

இலங்கையில் காணாமல்போயிருந்த நிலையில், உறவினர்களால் தேடப்பட்டு வந்தவர்களில் 37பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் தெரிவித்துள்ளதாக காணாமல்போனவர்கள் தொடர்பாக தேடியறிவதற்காக கொழும்பிலிருந்து இயங்கும் அமைப்பொன்று தெரிவித்துள்ளது. இந்த 37 பேரின் விபரங்களையும் இலங்கை அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாக ஜெனீவாவில் உள்ள காணாமற் போனோர் தொடர்பான செயற்குழுவின் செயலாளர் தெரிவித்திருப்பதாக கொழும்பில் இருந்து செயற்படுகின்ற காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கூறினார்.

ஐநா மனித உரிமைகள் பேரவைக் குழுவின் அமர்வின்போது, ஜெனிவாவுக்குச் சென்று இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் உண்மை நிலைமையைத் தெரிவிக்கும் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து பேச்சுக்ககள் நடத்தியபோதே, இந்தத் தகவல் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக மகேந்திரன் தெரிவித்தார்.

இந்த 37 பேரில் ஒருவர் சிங்களவர் என்றும் ஏனையோர் வடபகுதியின் பல இடங்களையும் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களது பெயர் விபரங்கள், தேசிய அடையாள அட்டை இலக்கம், வழக்கு நடைபெறும் நீதிமன்றம், வழக்கு இலக்கம் போன்ற சகல விபரங்களும் அரசாங்கம் ஜெனீவா குழுவிற்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த பெயர் விபர்ங்களைக் கொண்டவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு மேல் நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாகவும் மகேந்திரன் தெரிவித்தார்.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள 37 பேரில் வவுனியா கல்மடுவைச் சேர்ந்த நடராசா பேரின்பராசா என்பவரின் பெயரும் இருப்பதாக அவருடைய மனைவி பாலேஸ்வரி தெரிவித்திருக்கின்றார்.

தனது கணவன் காணாமல் போய் 6 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள போதிலும்இ இதுவரையிலும் அவரைப்பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது பற்றி எவருமே தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் பாலேஸ்வரி தமிழோசையிடம் கூறினார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் உள்ளுரில் எந்தவிதமான தகவல்களையும் வெளியிடாத அரசாங்கம் ஜெனீவாவில் உள்ள காணாமல் போனோர் தொடர்பிலான செயற்குழுவிற்கு மட்டும் 37 பேரைப் பற்றிய தகவல்களை வெளியிட்டிருப்பது உறவினர்கள் மத்தியில் பெரும் விசனத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கம் வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட நீதிமன்றங்களின் ஊடாக, காணாமல் போயிருப்பவர்கள் பற்றிய நிலைமைகளை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மகேந்திரன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply