அமெரிக்காவினால் இலங்கைக்கு மறைமுக வெற்றி – சுப்பிரமணியம் சாமி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை இலங்கைக்கு கிடைத்த வெற்றியாகும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சாமி தெரிவித்துள்ளார். அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா தெளிவான முடிவை எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது;

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிபந்தனையின்றி ஆதரித்து இருக்க வேண்டும். இல்லையேல் நிபந்தனையின்றி இந்த தீர்மானத்தை எதிர்த்து இருக்க வேண்டும்.

அப்படி செய்து இருந்தால், உலக நாடுகள் இந்தியாவை பாராட்டியிருக்கும். இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்று எந்த ஒரு நாடும் கூறவில்லை.

எனவே அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு மறைமுக வெற்றியே கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply