இந்திய உயர்ஸ்தானிகர் பௌத்த துறவிகள் சந்திப்பு

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலுமுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார்.  இலங்கை பௌத்த துறவிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (23) இடம்பெற்றுள்ளது.  இதன்போதே இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் இரண்டு பௌத்த துறவிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்தும் சுமுக நிலை உருவாக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அத்துடன் தமிழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அத்துடன் இலங்கையின் பௌத்த மக்கள் தமிழகத்தின் ஊடாக இந்தியாவுக்கு சென்று வழிபாடுகளை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை ஏற்படுத்தப்படும் என்றும் காந்தா தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டில் இரண்டு லட்சத்து 50,000 இலங்கையர்கள் இந்தியாவிற்கு சென்றுள்ள நிலையில் ஒரு லட்சத்து 75,000 இந்தியர்கள் இலங்கை வந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply