சென்னையில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகத்தை இடம் மாற்ற திட்டம் ?
சென்னையில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகம் கேரளாவில் உள்ள திருவநந்தபுரத்துக்கு மாற்றப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்தின் பாதுகாப்பு அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரொஹான் டயஸ், இலங்கைக்கு அழைக்கப்பட்டு நடத்தப்பட்ட கலந்துரையாடலை அடுத்து இந்த எதிர்ப்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்தும் தமிழ் உணர்வாளர்கள் இலங்கை தமிழர்களுக்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னையில் உள்ள உதவி உயர்ஸ்தானிகரக அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவது கடினமான விடயம் என்று ரொஹான் டயஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து உதவி ஸ்தானிகரத்தை கேரளா திருவனந்தபுரத்துக்கு மாற்றும் யோசனை வெளியிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply