90 வீதமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகவே விருப்பம்

90 வீதமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகவே விரும்புவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்களின் சர்வாதிகார ஆட்சி முறைமையை ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் விரும்பவில்லை. மாற்று அரசாங்கமொன்று அமைக்கப்படும் என உறுதியாள அறிவிக்கப்பட்டால் பலர் ஆளும் கட்சியை விட்டு விலகுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தம்மை முப்பது ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள முயற்சித்திருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளில் சிறையிலிருந்து விடுதலையானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சிவில் உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஸ்திரமாகக் காணப்படுகின்றது என பிரச்சாரம் செய்யப்பட்ட போதிலும் உண்மை நிலைமை அதுவல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply